பாறைக்குழி நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளான். கடந்த வருடம் சூர்யா அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு இந்த ஆண்டு பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா பள்ளியில் படித்த நண்பர்களுடன் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு குளிக்க சென்றுள்ளார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சூர்யா நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அவருடைய நண்பர்கள் கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவை சடலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.