இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் காண்பதால் ஆட்டத்தில் விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
🚨 Toss News 🚨
West Indies have elected to bowl against #TeamIndia in the fourth #WIvIND T20I.
Follow the match ▶️ https://t.co/DNIFgqfRJ5 pic.twitter.com/JUCQA1i5TY
— BCCI (@BCCI) August 6, 2022
இந்த போட்டியில் விளையாடும் 11பேர்:
இந்தியா XI: ஆர்.சர்மா, ஆர் பந்த் (வி.கே), எஸ் சாம்சன், எஸ் யாதவ், டி ஹூடா, டி கார்த்திக், ஏ படேல், பி குமார், ஆர் பிஷ்னோய், ஏ கான், ஏ சிங்.
வெஸ்ட் இண்டீஸ் லெவன்: கே மேயர்ஸ், பி கிங், எஸ் ஹெட்மியர், என் பூரன் (சி), ஆர் பவல், டி தாமஸ் (வாரம்), ஜே ஹோல்டர், ஏ ஹோசைன், டி டிரேக்ஸ், ஓ மெக்காய், ஏ ஜோசப்.