Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனை யாருன்னு தெரியாது”…. கூறிய மிஸ்கின்…. விளாசும் ரசிகாஸ்….!!!!!

சிவகார்த்திகேயனை யாருன்னு தெரியாது என சொன்ன மிஸ்கினை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்ற சிவகார்த்திகேயன். இவர் முதலில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து படிப்படியாக முன்னேறி மெரினா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதை அடுத்து 3 திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து தற்போது கமர்சியல் மாஸ் ஹீரோவாக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

தற்பொழுது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க மிஸ்கின் வில்லனாக நடிக்கின்றார். இந்த நிலையில் சென்ற 2014 ஆம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்று மிஸ்கின் பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

அந்நிகழ்ச்சியில் மிஸ்கினிடம் ரஜினி, கமல் பற்றி கேட்கப்பட்ட பொழுது ரஜினி என்றால் முள்ளும் மலரும், கமல் என்றால் சிறந்த நடிகர், அஜித் என்றால் சிறந்த மனிதர் எனக் கூறிய மிஸ்கின் அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பற்றி கேட்கப்பட்ட பொழுது எனக்கு தெரியாது என கூறியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை அன்று யார் என கேட்ட நீங்கள் தற்பொழுது அவரின் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றீர்கள் என கூறி வருகின்றார்கள். மேலும் மிஸ்கினை விமர்சித்து வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |