Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

லாரியில் இறந்து கிடந்த ஓட்டுநர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் லாரி ஓட்டுனரான பாண்டி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பாண்டி வேடசந்தூரில் இருந்து நோட்டு மற்றும் புத்தகங்களை ஏற்றி கொண்டு லாரியில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை கடைவீதி அருகே சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பாண்டி அப்படியே அமர்ந்துள்ளார்.

லாரி நிற்பதை பார்த்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பாண்டி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |