Categories
உலக செய்திகள்

எரிவாயு பயன்பாட்டை குறைக்கும் புதிய ஒப்பந்தம்…. ஹங்கேரி, போலந்து எதிர்ப்பு….!!!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு  விநியோகத்தை வழங்கி வந்துள்ளது. உக்ரைன் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் விதித்த அடுத்தடுத்த தடைகளைத் தொடர்ந்து ரஷ்ய ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு குறைத்து வந்துள்ளது. இந்த சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து பெரும் தங்களது எரிவாயு தேவையை  குறைப்பதற்காகவும் எரிவாயு சேமிப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தானாக முன்வந்து இந்த குளிர்காலத்தில் தங்களது எரிவாயு  பயன்பாட்டை 17 விதமாக குறைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த புதிய ஒப்பந்தத்தை செயல்படுத்தும் சட்டத்திற்கு பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெள்ளிக்கிழமை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளின் இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கும் செக் குடியரசு வெளியிட்டிருக்கின்ற ஆவணத்தின் படி ஹங்கேரி மற்றும் போலந்து  தவிர அனைத்து நாடுகளும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது என்று தெரிய வந்திருக்கின்றது. இதற்கு ரஷ்யாவிடம் இருந்து அதிக எரிவாயு  வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஹங்கேரி  ஈடுபட்டிருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒப்பந்தத்தை ஹங்கேரி முதன்முதலாக எதிர்த்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் ஒப்பந்தத்தை ஆதரித்த போலந்தும் தற்போது இறுதி சட்டத்தை எதிர்த்து இருக்கின்றது. இதற்கு சட்டத்தின் அடிப்படை குறைபாடுகள் இருக்கிறது எனவும் உறுப்பு நாடுகளின் ஆற்றல் கலவையை பாதிக்கும் முடிவுகள் அனைத்து நாடுகளில் ஒருமனதாக ஒப்புதல் உடன் எடுக்கப்பட வேண்டும் எனவும் போலந்து கருத்து தெரிவித்திருக்கின்றது.

Categories

Tech |