Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்….. போடாதவங்க போட்டுக்கோங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னையில் மட்டும் இதுவரை 32 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை 33வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

ஒரு வார்டுக்கு பத்து முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 47 லட்சத்து 97 ஆயிரத்து 719 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது வரை 4 லட்சத்தி 34 ஆயிரத்து 244 பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |