ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் செய்தி சேகரிக்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பத்திரமாக உள்ளார்.
அனஸ் மாலிக் என்ற பாகிஸ்தான் இளம் பத்திரிக்கையாளர் ஆப்கானிஸ்தானில் காணாமல் போனாதாக செய்திகள் வெளியாகின. மாலிக் தலிபான்களால் தாக்கப்பட்டதாகவும், அவர் உயிருடன் இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் தெரிவித்துள்ளார். மாலிக் இந்தியாவின் WION சேனலில் பணிபுரிகிறார். புதன்கிழமை ஆப்கானிஸ்தானை அடைந்த அவர் வியாழக்கிழமை இரவு காணாமல் போனார். மாலிக் காணாமல் போனது குறித்து அவருடன் இருந்த பத்திரிகையாளர் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு தொலைபேசியில் மாலிக் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. அதன்பிறகு, மாலிக் காபூலில் பாதுகாப்பாக இருப்பதை பாகிஸ்தான் தூதர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். தலிபான் அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டதாக மாலிக் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.