கிசான் மோர்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் யுவ கிசான் சமிதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீகாந்த் தியாகியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதில் ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்வது போல தெரிகின்றது. மேலும் அவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்யவும் முயற்சி செய்துள்ளார். நொய்டாவில் உள்ள செக்டார் 93 பணியில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டியில் மரங்களை நட்டு சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்வதாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கு சங்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் தியாகி அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதற்கிடையே ஸ்ரீகாந்த் அவதூராக பேசியதாக கூறப்படுகின்றது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் தியாகி பாஜகவின் தலைவர் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்ரீகாந்த் பிரதமர் நரேந்திர மோடி, உத்திரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி நட்டா போன்றோரின் புகைப்படம் அவரது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.