தமிழகத்தில் தோட்டக்கலை பெயர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கான அறிவிப்புகள் இந்த ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரித்து விளைச்சலை பெருக்கும் நோக்கத்திலும் அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் நடப்பு ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தில் பல்வேறு பணிகளை அரசு கையாண்டு வருகிறது.
அதற்காக 27.50 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிக்க விதைகளும் நடவு கன்றுகளும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. எனவே இந்த தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை இணையத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தாங்களாகவோ அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலமாகவோ tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.