Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட வா, ”கூட வா”ன்னு சொல்லுறான்… பார்க்க தானே போறீங்க ? இன்னும் எதனை நாளைக்குன்னு..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் என்று மக்களை நம்பவில்லை. எதற்கு இத்தனை கட்சி ?  நான் மக்களை நம்புகிறேன்; மக்களுக்கு உண்மை நேர்மையுமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்; என்றைக்கு மக்கள் என்னை நம்புகிறார்களோ, அன்றைக்கு வெற்றியை தரட்டும், அதுவரை போராடுகிறேன்.

மக்களை நம்பாமல் அரை விழுக்காடு, கால் விழுக்காடு, ஒரு விழுக்காடு, முக்கால் விழுக்காடு ஓட்டு வச்சுருக்குறவன் எல்லாம் கூட வா, கூட வா   என்று சொல்கிறார்கள்.  கோட்பாடு இருக்கு; உறுதியான கோட்பாடு இருக்கு; எனக்கு நல்ல உயர்ந்த கொள்கை இருக்கிறது என்றால் அதை வைத்து மக்களிடம் பேசி வாக்கை கேளுங்கள்.

உங்களிடம் கோடிகள் இருக்கு,  நீங்கள் பணத்தை முன்னிறுத்துகிறீர்கள், நாங்கள் மானமிக்க இனத்தை முன்னிறுத்துகிறோம். நீங்கள் கோடிகளை தூக்கிக் கொண்டு வருகிறேன், நாங்கள் உயர்ந்த கொள்கைகளை தூக்கிக் கொண்டு வருகிறோம். பார்க்க தானே போறீங்க ? எத்தனை காலத்திற்கு நீங்கள் இப்படி ஆடுவீங்க ? பிரிட்டி சாம்ராஜ்யம், முகலாய சாம்ராஜ், விஜயநகர பேரரசு, சேர சோழ பாண்டியர் எல்லாம் வீழ்ந்திருக்கிறது என தெரிவித்தார் .

Categories

Tech |