Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணம்….. மணமகன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு….. தூத்துக்குடி அருகே பரபரப்பு…!!

தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணமகன் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மகுடம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த வாரம் எட்டையபுரம் பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் என்பவர் தூத்துக்குடி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 14 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன் தனபால், சிறுமியின் தாய், ப்ரோக்கர், மணமகனின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |