தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியுடன் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மானிடவியல் ஆய்வு குறித்த பல்துறை அணுகுமுறை என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்க தமிழ்த்துறை இணை பேராசிரியர் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனர் பவித்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதை அடுத்து அயலக தமிழர் நலத்துறை இணை இயக்குனர், கூடங்குளம் அணுமின் நிலைய அறிவியல் அதிகாரி, மயக்க மருந்துகள் நிபுணர் ஆகியோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
மேலும் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் பங்கேற்று 40 கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். இக்கருத்தரங்கத்தின் இறுதியில் கல்லூரி உள்தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர், உதவி பேராசிரியை மேரி சுபா செல்வராஜ் நன்றியுரை வழங்கினார்கள்.