Categories
மாநில செய்திகள்

இனி பெண்கள் பயணம் ரொம்ப ஈஸி…. சென்னையில் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க….!!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பஸ்களை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றியுள்ளது. இந்த பஸ்கள் அறிமுகத்தின் மூலம் பெண்கள் குழப்பம் இன்றி தூரத்தில் இருந்தே பஸ்களை பார்த்து அதில் ஏறி செல்லலாம். பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வெள்ளை போர்டு பேருந்துகளின் முகப்பில் பிங்க் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை போக்குவரத்துறை அமல்படுத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக சென்னையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 60 வெள்ளை போர்டு பேருந்துகளின் முன்புறம் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டு இயக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Categories

Tech |