செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிடம் என்றால் என்ன ? என்பதற்கு விளக்கம் சொல்ல தெரியாத ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு நீங்கள் எவ்வளவு காலத்திற்கு இருப்பீர்கள். 5ஜீ ஏலத்தில் இழப்பீடு நேர்ந்திருக்கிறது என்று சொல்கிற பெருமக்கள்; இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? 8 ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சிக்கு பிறகு இப்பதான் தெரிகிறதா ?
2 1/2 லட்சம் கோடி இழப்பீடு நேர்ந்து இருக்கு என்று இப்பதான் தெரிகின்றதா ? நான் வந்து 5g ஸ்பெக்ட்ரம்ல மட்டும் எதுவும் சொல்லவில்லை, நாட்டையே அவர்கள் அதானி, அம்பானிக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அருந்ததிராய் சொன்னதை நான் திருப்பி ஒரு முறை பதிவு செய்கிறேன். நாட்டை நான்கு பேர் ஆள்கிறார்கள். இரண்டு பேர் நாட்டை விற்கிறார்கள், இரண்டு பேர் நாட்டை வாங்குகிறார்கள். இந்த நான்கு பேருமே குஜராத்திகள் என்ற கருத்தை நான் ஏற்கிறேன் அதை திரும்ப திரும்ப மக்களுக்கு வலியுறுத்துகிறேன்.
அதுதான் உண்மை. அருமை சகோதரர் பிரகாஷ்ராஜ் சொன்னது தான்… மோடி டீ வித்தார் என்று நம்புகின்ற நாட்டு மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்ப மறுக்கிறார்கள் இதுதான் உண்மை. நீங்கள் 5g அலை கற்றைக்கு வந்து விட்டீர்கள் ஏகப்பட்டது இருக்கு இன்னும் என விமர்சித்தார்.