ஈரானுக்குச் சென்ற புடின், புடினே அல்ல எனகூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உக்ரைனில் புதியதாக பதவியேற்றிருக்கும் உளவுத் துறைத் தலைவர்.
இந்த வாரம் உக்ரைனில் புதியதாக உளவுத் துறைத் தலைவராக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் Kyrylo Budanov, அண்மை காலமாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புடினுடைய தோற்றத்தில் வித்தியாசங்கள் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக புடினுடைய உயரம் மற்றும் காதுகளின் தோற்றத்தில் வித்தியாசம் இருப்பதாக Budanov குறிப்பிட்டிருக்கிறார். அதாவது புடினுடைய புகைப்படங்களை கவனித்துப் பார்த்தால், சில படங்களில் அவரது காது சிறியதாகவும், வேறு சில படங்களில் அவரது காது பெரியதாகவும் இருப்பதைக் காணலாம் என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில் புடின் அண்மையில் ஈரானுக்குச் சென்றார்.
அப்போது விமானத்தில் இருந்து வெளியேவரும் புடினை கவனியுங்கள் என்கிறார் Budanov. நடக்கவே தடுமாறும் புடின் வேகமாக துள்ளிக்குதித்து வருவதை அந்தக் காட்சியில் காணலாம். ஆகவே அது புடினே அல்ல எனகூறும் Budanov, உண்மையான புடின் மோசமான முறையில் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவும், பொதுநிகழ்ச்சிகளில் புடினுக்கு பதிலாக அவரது டூப் பங்கேற்பதாகவும் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். முன்பே 2018 ஆம் வருடம் புடினைப் போலவே தோற்றம் கொண்ட போலி புடின்கள் 3 பேர் வரை உள்ளதாக English Russia என்ற நபர் ஊடகத்தில் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.