Categories
அரசியல்

அரசு பள்ளியில் படித்த மாணவன்…. ஏராளமான விருதுகளை குவித்து…. தமிழக டி.ஜி.பியாக உயர்ந்த பெருமை….!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்க்கலாம்.

தமிழக டிஜிபி ஆக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு கடந்த 1962-ஆம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பகுதியில் பிறந்தார். இவர் குழித்துறையில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பள்ளி படிப்பை படித்து முடித்துவிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

இதனையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொதுச் சட்டத்தில் இளங்கலை பட்டமும், மக்கள் தொகை கல்வியில் முதுநிலை பட்டமும் பெற்றார். இதைத்தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் மிஸ்ஸிங் சில்ட்ரன் என்ற ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு, மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டமும் பெற்றார். கடந்த 1987-ஆம் ஆண்டு சைலேந்திரபாபு தமிழ்நாடு பணிநிலை பிரிவின் இந்திய காவல் பணி அதிகாரியாக பதவியேற்றார்.

கடந்த 2008 முதல் 2010-ம் ஆண்டு வரை சைலேந்திரபாபு தனிநபர் தகவல் பிரிவிலும், 2010 முதல் 2011-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையில் ஐஜி ஆகவும், 2011 முதல் 2012-ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் காவல்துறை ஆணையாளராகவும், கடந்த 2014-ம்  ஆண்டு முதல் 20221 வரை தமிழக கடலோர பாதுகாப்பு குழுவின் தலைமை இயக்குனராகவும், கடந்த 2021-ம் ஆண்டு வடக்கு மண்டலத்தின் ஐஜி ஆகவும் பொறுப்பு வகித்தார்.

இவர் கடமை உணர்வுக்கான இந்திய குடியரசு தலைவரின் விருது, உயிர் காத்த செயலுக்கு இந்திய பிரதமரின் விருது, வீர தீர செயலுக்கான தமிழக முதல்வரின் விருது, கடமை உணர்வுக்கான தமிழக முதல்வரின் விருது, சிறப்பு அதிரடிப்படையில் வீரதீர செயலுக்கான தமிழக அரசின் விருது, சிறப்பு பணிக்கான இந்திய குடியரசு தலைவரின் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் உடலினை உறுதி செய், நீங்களும் இந்திய காவலர் பணியாளர் ஆகலாம், சாதிக்க ஆசைப்படு, நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம், அமெரிக்காவில் 24 நாட்கள், PIRNCIPLESS OF SUCCESS IN INTERVIEW, BOYS AND GIRLS BE AMBITIOUS போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் டிஜிபி சைலேந்திரபாபு பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நீண்ட தூரம் சைக்கிளில் சென்று அதை வீடியோவாக எடுத்து இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார். இவர் தமிழகத்தின் டிஜிபி ஆக பதவியேற்ற உடன் பல்வேறு தரப்பிலிருந்து சைலேந்திரபாபுவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமாக இருந்தது.

Categories

Tech |