Categories
உலக செய்திகள்

இலங்கைக்காக ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பெண்…. பாஸ்ப்போர்ட்டை கைப்பற்றிய அதிகாரிகள்…!!!

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் வசித்து வரும் நிலையில், போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் அவரின் பாஸ்போர்ட் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த கெய்லீ ஃப்ரேசர் என்ற பெண் இலங்கையில் வசித்து வருகிறார். அவர், இலங்கையில் நடக்கும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் குடியிருப்பிற்கு சென்ற அதிகாரிகள் அவரின் பாஸ்போர்ட்டை கைப்பற்றினார்கள்.

இது குறித்து கெய்லீ ஃப்ரேசர் தெரிவித்ததாவது, அதிகாரிகள் என் பாஸ்போர்ட்டை கேட்டார்கள். தரவில்லை என்றால் கைது செய்து விடுவதாக எச்சரித்தார்கள். மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு முன் தினம் தனக்கு விசா அளித்த நிறுவனத்திலிருந்து ஊழியர் ஒருவர், தொலைபேசியில் என்னிடம் பேசினார்.

அந்த ஊழியர் அதிகாரிகள் உங்களை பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். நீங்கள் உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறி விடுங்கள் என்று கூறினார். தெருவில் என்னை 40 நிமிடங்களாக நிற்க வைத்தார்கள். நான் என்ன தவறு செய்து விட்டேன் என்று அவர்களால் கூற முடியவில்லை.

நான், விசா விதிமுறைகள் மீறிவிட்டதாக கூறுகிறார்கள். கடைசியாக என்னிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கும் வரை நான் என்ன விசா வைத்திருக்கிறேன் என்று கூட அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், அதிகாரிகளுடன் நடந்த பிரச்சனை குறித்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Categories

Tech |