Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தின் முடிவில் அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் பொருட்களின் எடை சரியாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடை ஊழியர் முறைகேடு செய்து அந்த தொகையை திரும்ப செலுத்தினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா இருப்பதால் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுணர்களுக்கு முழு உடல் பரிசோதனை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளலாம்.

மேலும் ரேஷன் கடைகளில் வசதி படைத்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை களப்பணியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வுக்குப் பிறகு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக பொருட்கள் வழங்க வேண்டும். குறிப்பாக உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்களை கடத்தும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |