பாட்டியிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் கோபத்தில் பாட்டியை பேரன் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள விஸ்வநாதபுரம்புதுமனையை சேர்ந்தவர் மும்தாஜ் இவர்களுக்கு அசன் ஷா என்ற மகன் உள்ளார். இவர்களது பேரன் அப்துல் சலாம் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்துல் சலாம் அவ்வப்போது தனது பாட்டியிடம் வந்து பணம் பெற்று செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் பாட்டியிடம் பணம் கேட்டு சென்றுள்ளார். ஆனால் பாட்டியோ தனக்கு வயதாகிவிட்டது நீதான் பணம் தந்து எனக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். இருந்தும்அப்துல் சலாம் பணம் கேட்டு தகராறு செய்ய அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கோபம் தீராத அப்துல்கலாம் இன்று அதிகாலை பாட்டியின் இல்லத்திற்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் பாட்டியின் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் கீழே போட்டு பாட்டியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். அப்துல் சலாம் தாக்கியதில் பாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மும்தாஜ் இறந்ததை அறிந்த அப்துல் சலாம் அங்கிருந்து ஓடி விட்டார்.
காலையில் வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் கொண்டு அங்கு சென்று பார்த்தபோது மும்தாஜ் பாட்டி பிணமாக கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து செங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் பாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து பாட்டியைகொன்றுவிட்டு தப்பியோடிய அப்துல் சலாமை தேடி வருகின்றனர்.