பழனியிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பேருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். அப்போது பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டினார். இதையடுத்து காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்த போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பேருந்தை டிரைவர் தினேஷ் குமார் நிறுத்த முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் விபத்தில் பேருந்தில் வந்த 10 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.