தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தகுதியுள்ள அரசு அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் நாள் என்று செயற்கை காலி இடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் பதவி உயர்வை பெற்று முழு சேவை செய்யாமல் பண பலன்களை சிலர் பெறுவதாக குற்றச்சாட்டுகள் தமிழக அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதனால் செயற்கை காலியிடங்களை ஏற்படுத்துதலை அரசு ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்காலிக பதவி உயர்வு வழங்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.மேலும் அரசு ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.