Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞர்….. பதைபதைக்கும் வீடியோ காட்சி…. பெரும் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவிக்கு பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டிய என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அஜய் பாண்டியன் புல்லாவெளி அருவியில் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அருவியில் உள்ள பாறையில் சரிவு ஏற்பட எதிர்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து மாயமாகிறார். இதை தொடர்ந்து அவரது நண்பர்கள் கேமராவில் பதிவு செய்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாயமான இளைஞரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இரவு நேரம் ஆனதாலும், அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |