நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ் மற்றும் 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மந்திரி ஜிகேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிஹேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1472 ஐஏஎஸ் பணியிடங்களும், 864 ஐபிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளது. நேரடியாக பணியமறுத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்கான பஸ்வான் கமிட்டியின் பரிந்துரைகள் படி சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐஏஎஸ் அதிகாரிகள் பணிக்கு சேர்க்கப்படுகின்றன.
ஐபிஎஸ் அதிகாரிகளை பொருத்தமட்டில் கடந்த 2020 ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் நேரடி சேர்க்கை நியமன எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.