பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 22 ஆண்டுகளாக சைக்கிளில் சென்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை எம் எஸ் நாயுடு கோவில் தெருவை சேர்ந்த புஷ்பராணி பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் போக்குவரத்து நெரிசல் காரணமாக தினமும் சென்னை சாலையில் சைக்கிளிலேயே பணிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தனக்குரிய பாணியில் போலீஸ் உடையில் சைக்கிளில் செல்வதை பார்க்கும் வாகன ஓட்டிகள் பெரும் ஆச்சரியத்துடன் கூறுகின்றன.
இது பற்றி சிலர் அவரிடம் கேட்கும் போது கடந்த 22 ஆண்டுகளாக பணிந்து சைக்கிளில் சென்று வருவதாக அவர் கூறி வருகிறார். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி கூறியதாவது” நான் போலீஸ் பணியை கடந்த 1997 ஆம் ஆண்டு தொடங்கினேன். 2001 ஆம் ஆண்டு ஆயுதப்படையில் பணியாற்றிய நாள் முதல் இந்த நாள் வரை தான் வசிக்கும் வீட்டிலிருந்து பணிபுரியும் காவல் நிலையத்திற்கு சைக்கிளில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளேன்.
எனது தந்தை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். அவர் பணிபுரிந்த காலங்களில் எங்களது வீட்டில் இருந்து போலீஸ் நிலையம் வரை சைக்கிளில் தான் செல்வார். அவரது பாணியிலேயே நானும் சைக்கிளில் வருகிறேன். இதனால் எனது உடல் நலம் ஆரோக்கியத்துடன் உள்ளது. அவருக்கு தற்போது 70 வயது ஆகிறது. அவருக்கு இன்றுவரை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இதுவே எனக்கு உந்துதலாக உள்ளது .அவரது வழியில் நானும் சைக்கிளில் பணிக்கு வருகிறேன்” என்று தெரிவித்தார் .