குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் மனமேடையிலையே கையெழுத்திட்டுள்ளனர் புதுமண தம்பதியினர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவரணியின் அமைப்பாளர் சபீர் அன்சில் மற்றும் சஜிதா பர்வீன் என்பவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமேடையில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கையெழுத்து இயக்கத்தில் தனது கையொப்பங்களை பதித்தனர் மணமக்கள்.
அவர்களைத் தொடர்ந்து திருமண விழாவிற்கு வந்துள்ள அனைவரும் தனது கையெப்பத்தை இட்டனர். திருமணவிழாவில் ஈரோடு மாவட்ட திமுக செயலாளர், புளியம்பட்டி நகர செயலாளர், சத்தியமங்கலம் ஊராட்சி குழு தலைவர் என கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.