நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு ரஜினி தனது சம்பளத்தை குறைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகின்றது. இந்த நிலையில் ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்கு 118 கோடி சம்பளமாக வாங்கினாராம். ஆனால் அத்திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் ஜெயிலர் திரைப்படத்திற்கு தனது சம்பளத்தை குறைத்து இருப்பதாக தகவல் வெளியாக இருக்கின்றது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரஜினி தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பார் என கூறி வருகின்றார்கள்.