திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
அதன் பிறகு ஒரு சில பகுதிகளில் நிலநடுக்கமானது 7 ஆகவும் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.