இயக்குனர் அனுராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சீதாராமன். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்ற இந்த படத்திற்கு திடீர் தடை அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சீதாராமன் படத்தில் ராஷ்மிகா மந்தானா, கௌதம் மேனன், சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் மொழிகளில் உருவாகி இருக்கின்ற இந்த படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த சூழலில் இந்த படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் குவைத், ஓமன் கர்த்தா, சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகள் இந்த படத்திற்கு தடை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரொமான்டிக் ட்ராமா ஜானலில் சீதாராமம் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ராணுவ அதிகாரியாக ராம் எனும் கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த படத்திற்கு அரபு நாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மானின் குரூப் என்னும் படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்