தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017 ஆம் வருடம் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் சென்னையை சேர்ந்த சமந்தா கணவருடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு காரணம் நாகசைத்தன்யா குடும்பத்தினர் சமந்தாவிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தான் என கூறப்பட்டது.
இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில் சமந்தாவை விவாகரத்து செய்த பின் தெலுங்கு நடிகரான நாகசைதன்யா நடிகை ஷோபிதா உடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது லண்டனில் ஓய்வெடுத்துவரும் ஷோபிதா தனது போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.