44 லட்சம் உண்டியல் காணிக்கையாக திருத்தணி முருகன் கோவிலில் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆடிப்பூர திருவிழா சீரும் சிறப்புமாக நடந்தது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் காணிக்கை செலுத்தி விட்டு சென்றார்கள்.
இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் 44 லட்சத்து 74 ஆயிரம் உண்டியல் காணிக்கையாக வசூலாகி உள்ளது. மேலும் தங்கம் 85 கிராம், வெள்ளி 3,389 கிராம் காணிக்கை செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.