Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு செம ஜாக்பாட்…… சிறப்புச் சலுகை அறிவிப்பு…..!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதில் “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பயண சீட்டு வழங்கும் பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு மாதமும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிகமான பயண சீட்டு விற்பனை செய்த பணியாளர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிசு வழங்கப்படும். பெரும்பாலும் பயணிகள் தற்போது கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி வருகிறார்கள். கியூஆர் குறியீடு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் சலுகை வழங்கி வருகின்றது. பயணிகள் பயண அட்டையை பயன்படுத்தும் போது 20% கட்டணம் சலுகை கிடைப்பதோடு வரிசையில் நிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

தற்போது 13 லட்சத்து 89 ஆயிரத்து 225 பேர் பயண அட்டை பெற்றுள்ளனர். இதில் நாள்தோறும் 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் பயண அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு பயண அட்டை வாங்கி நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.  ஆண்டு இறுதியில் அதே பயண அட்டையை புதுப்பித்துக் கொண்டால் மீண்டும் 5 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |