Categories
தேசிய செய்திகள்

13 வயது மாணவிக்கு அடி, உதை….. சக மாணவி வெளியிட்ட வைரல் வீடியோ….. பெரும் அதிர்ச்சி….!!!!

டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் மூத்த மாணவிகள் ஐந்து பேர் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். இதனை படம் பிடித்து சக மாணவி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி கூறியதாவது: “மால்கா கஞ்சி பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் 13 வயது மகள் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வருகிறார். அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அந்த மாணவியை அடித்து தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அலாவுதீன் தகவல் தெரிவிக்காமல் இந்திராவ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது மகளை கொண்டு போய் சேர்த்துள்ளார். இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. சம்பவம் பற்றி சிறுமியும் எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய மாணவிகள் ஐந்து பேரையும் அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சிறுமியை மாணவர்கள் தாக்கிய காரணம் எதையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

Categories

Tech |