Categories
விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறிய 3 பேர்…. குத்துச் சண்டையில் 3 பதக்கம் வென்ற இந்தியா…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு 3 பதக்கம் உறுதியாகியது. குத்துச்சண்டையில் இந்தியா சார்பாக 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் பங்கேற்றுள்ளனர். இவற்றில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் போன்றோர் முன்பே கால் இறுதியில் தோற்று வெளியேறியிருந்தனர். நேற்று நடைபெற்ற கால்இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றியடைந்தனர். இதன் காரணமாக குத்துச்சண்டையில் 3 பதக்கம் உறுதியாகியது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன்கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர்கொண்டார்.

ஜரீன் 5-0 எனும் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப் லேயை 6- ஆம் தேதி சந்திக்கிறார். இதேபோன்று 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் போன்றோரும் கால் இறுதியில் வெற்றியடைந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றனர். ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளிபதக்கம் வென்ற லவ்லினா கால்இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் கலந்துகொண்ட அவர் கால் இறுதியில் 2-3 எனும் கணக்கில் வேல்ஸ்நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

Categories

Tech |