கோழிகளை விழுங்கிய பாம்பை வாலிபர்கள் பிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விலை சங்கிலிகோணம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது வீட்டின் பின்புறம் தனித்தனியாக கூண்டில் வைத்து கோழி மற்றும் முயல்களை வளர்த்து வருகிறார். இதனையடுத்து நேற்று காலை சுரேஷின் மகன் கோழி கூண்டை திறந்துள்ளார். அப்போது கூண்டில் மலைப்பாம்பு ஒன்று 4 கோழிகளை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது.
மேலும் 2 கோழிகள் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷின் மகன் உடனடியாக கத்தியுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு வந்த அப்பகுதி வாலிபர்கள் 15 அடி நீளம்முள்ள அந்த மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.