இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள செங்கல் சூலையில் கூலித் தொழிலாளியாக பிஹாரிலால் என்பவர்(45) பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.800 வரை கூலிக்கு வேலை செய்கிறார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது பருவமழை காரணமாக செங்கல் சூலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தன்னுடைய சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் கன்னூஜ் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உள்ளார். அப்போது அங்கு பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள தனது ஜன் டன் வங்கி கணக்கிலிருந்து ரூ.100 எடுத்துள்ளார். அதன் பிறகு சில நிமிடங்களில் அவரது மொபைல் போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் ரூ.2700 கோடி பேலன்ஸ் இருப்பதாக காட்டியுள்ளது. இதனை பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோய் திக்குமுக்காடி போய் உள்ளார். உடனே இவர் அருகில் உள்ள பேங்க் மித்ரா சென்று வங்கி இருப்பை பரிசோதித்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கு ரூ.2700 கோடி இருந்தது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் மகிழ்ச்சி சிறிது காலம் நீடித்தது. ஏனென்றால் அவர் தனது கணக்கை சரிபார்க்க வங்கி கிளைக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.126 மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து பிஹாரிலால் கூறியது, எனது கணக்கை மீண்டும் சரிப்பார்க்கும் படி அவர்களிடம் கேட்டேன். அதன் பிறகு அவர் அதை 3வ் முறை சரி பார்த்தார். என்னால் நம்ப முடியாமல் போன போதும், வங்கிகணைக்கு எடுத்து தன்னிடம் கொடுத்தார். எனது கணக்கில் ரூ.2700 கோடி இருப்பதை பார்த்தேன் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து இது குறித்து வங்கி அதிகாரி அபிஷேக் சின்ஹா கூறியது, வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் ரூ.126 மட்டுமே இருந்தது. இது வங்கி பிழையாக இருக்கலாம். பிஹாரில் லாலின் கணக்கு சிறிது நேரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.