தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு இளம் பெண்கள், ஆண்கள் என ஒர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இவர் “ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் பலரின் பாராட்டுகள் பெற்று வருகிறது.
இதனையடுத்து சில தினங்களுக்கு முன் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இருப்பினும் திரையரங்குகளில் இந்த திரைப்படம் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஓடிடியில் ராக்கெட்ரி பார்த்துவிட்டு தியேட்டர்களுக்கு செல்லும் அனைவருக்கும் அன்பும், நன்றியும் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணனின் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார்.