Categories
சினிமா

உக்ரைனியர்களை சந்தித்த நடிகை பிரியங்கா சோப்ரா…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்  பிரியங்காசோப்ரா. இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் போர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்து இருந்தது. சென்ற 2018 ஆம் வருடம் பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இதில் பிரியங்காசோப்ரா நடிப்பது மட்டுமின்றி யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் உக்ரைன்-ரஷ்யா இடையில் ஏற்பட்ட போரினால் உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இவர்களுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும் என குரல் கொடுத்த பிரியங்காசோப்ரா, அதற்கான நன்கொடையும் திரட்டி வந்தார். இந்த நிலையில் பிரியங்காசோப்ரா போலந்தில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள உக்ரைன்மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் சமூகவலைதளபக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |