பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் தைவான் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் நாட்டை சுற்றி ராணுவ போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் பல விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தைவானில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட சில அலுவலகங்களில் ஏற்கனவே சைபர் தாக்குதலால் இணையதளங்கள் முடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்களும் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு தற்காலிகமாக ஆப்லைனில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா மற்றும் சீன நாட்டில் இருந்து தான் சைபர் கிரைம் தாக்குதல்கள் நடப்பதாக தைவான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.