அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் சென்ற நிலையில் அவரின் விமானம் அதிக நபர்களால் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி ஆசிய பயணம் மேற்கொண்டார். அதில் அவர் தைவான் நாட்டிற்கு செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. இதனை சீனா கடுமையாக எதிர்த்தது. மேலும், தங்கள் உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது போன்று இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் இதனை மீறி நான்சி பெலோசி விமானத்தில் நேற்று முன்தினம் சென்றிருக்கிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பயணித்த விமானத்திற்கு பாதுகாப்பாக தைவான் நாட்டை சேர்ந்த விமானங்களும் வானில் சென்றுள்ளன. இந்நிலையில் சீன நாட்டின் விமானங்களும் தைவானின் வான் எல்லைக்குள் புகுந்திருக்கின்றன.
இந்த பரபரப்பிற்கு இடையில் அவரின் விமானம் தைவான் நாட்டின் தலைநகருக்கு சென்றிருக்கிறது. அவர் பயணித்த விமானம் இணையதளத்தில் அதிக நபர்களால் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,20,000 நபர்கள் அவர் பயணித்த விமானத்தை இணையதளத்தில் கண்காணித்திருக்கிறார்கள்.