Categories
தேசிய செய்திகள்

கொட்டும் மலையில் சபரிமலையில் சாமி தரிசனம்….. சிறப்பாக நடந்த நிறைப்புத்தரிசி பூஜை….!!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தொடர்ந்து இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு ஆவணி மாதம் மலையாள மாதமான  சிங்க மாத பூஜைக்காக வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலிமலை வழி பாதையை பயன்படுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொட்டும் மழையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்களுக்கு பிரசாதமாக நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.

Categories

Tech |