தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிக மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பாதிப்பு ஏற்பட கூடிய இடங்களில் முகாம்கள் தயாராக உள்ளன. மழையின் பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Categories
தமிழகத்தில் கனமழையை சமாளிக்க ரெடி: அமைச்சர் தகவல்…!!!!
