மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் அருகே விட்டாநிலைப்பட்டி பகுதியில் மதலையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் வேளாங்கண்ணி குடும்பப் பிரச்சினையின் காரணமாக மதலையம்மாள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இது தொடர்பாக கடந்த வருடம் இலுப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வேளாங்கண்ணிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.