தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர எண்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையினை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். மேலும் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
கடந்த ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் 242.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மலையை விட 94 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32 மாவட்டங்களில் மழை பொழிவு ஏற்பட்ட நிலையில் மாநில சராசரி மழைப்பொழிவு 5.48 மில்லி மீட்டர் ஆகும். கனமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில் பேரிடர் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பொது மக்களுக்கு உதவும் வகையில் அவசர எண்கள் வெளியிடப்பட்டுள்ளது . அதன்படி மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம் – 1077; மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் – 1070 என்ற Toll free எண்கள் மூலமாகவும் 9445869848 என்ற Whatsapp எண் மூலமாகவும் தொடர்பு கொண்டு பாதிப்புகளை தெரியப்படுத்தலாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.