லால் சிங் சத்தா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கரீனா கபூர் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பாலராஜு என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இந்த படம் கடந்த 1994-ஆம் ஆண்டு ஹாலிவுட் வெளியான பாரஸ்ட் கம் என்ற திரைப்படத்தை நழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா லால் சிங் சத்தா திரைப்படத்தில் நடித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதாவது நாக சைதன்யா சென்னையில் வளர்ந்து ஹைதராபாத்தில் குடியேறியதாக கூறியுள்ளார். அதன் பிறகு ஹிந்தி சிறந்ததாக இல்லை. நான் ஹிந்தியால் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் உணர்ந்தேன். இதன் காரணமாக நான் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் அதை தவிர்த்து வந்தேன். நான் ஒரு தென்னிந்தியன் என்று சொல்லும்போது மக்கள் யோசிக்கிறார்கள். இதனைய டுத்து லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்கு முக்கியமான காரணம் நான் பேசும்போது தென்னிந்திய சாயல் இருக்க வேண்டும் என்று பட குழுவினர் விரும்பியது தான். நான் ஒரு தென்னிந்தியனாக படத்தில் நடித்துள்ளேன். மேலும் படத்தில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியை கலந்து பேசி உள்ளேன் என்றார்.