விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பிரபல டிவி நிகழ்ச்சியான காபி வித் கரண் நிகழ்ச்சியில் அனன்யா பாண்டே மற்றும் விஜய் தேவரகொண்டா பங்கேற்றனர்.
அப்பொழுது விஜய்யிடம் ராஷ்மிகாவை காதலிக்ககிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ராஷ்மிகா நல்ல நண்பர் என கூறினார். மற்றொரு பேட்டியில் ராஷ்மிகா மிகவும் அழகானவர் என தெரிவித்தார். இதனால் தான் இருவரும் தற்பொழுது காதலிப்பதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விஜய்யும், ரஷ்மிகாவும் காதலிப்பாக பேச்சாக உள்ளது. அதை இருவரும் உறுதி செய்யவில்லை. இந்நிலையில் தான் புது தகவல் கிடைத்துள்ளது. அது, ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்ததாகவும் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் முறிந்து விட்டதாகவும் இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பது தெரியவில்லை. காதல் மறைந்தாலும் தற்பொழுது இருவரும் நண்பர்களாக இருக்கின்றார்கள்.