Categories
சினிமா தமிழ் சினிமா

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் “இந்தியன் 2″….. வெளியான பட அப்டேட்…!!!!!

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியன் 2 திரைப்படம் இயக்கப்பட்டு வந்த நிலையில் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

மூன்று வருடங்களாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படத்தின் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. இயக்குனர் சங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். அந்த படத்தை முடித்த பிறகு இந்தியன் 2 படப்பிடிப்பை செப்டம்பரில் தொடங்க இருப்பதாக கூறப்படுகின்றது. இத்திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

Categories

Tech |