Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு….. சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி….!!!!

சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண இந்த முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 25ஆம் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மெரினா கடற்கரையில் நடைபெறுவது வழக்கம். அலங்கார ஊர்திகள், காவலர்கள் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை கண்டு ரசிக பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய உள்ள நிலையில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், வயதானவர்கள் ,சிறுவர்கள் அழைத்து வர வேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Categories

Tech |