Categories
தேசிய செய்திகள்

ஷின்டேயின் சிவசேனா அணி எம்எல்ஏ கார் மீது தாக்குதல்…. முக்கிய பிரமுகர் 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!!

மராட்டியத்தில் முன்னாள் முதல் மந்திரி உத்தவ்  தாக்கரே தலைமையிலான சிவசேனவிலிருந்து மந்திரி ஏக்நாத் ஷின்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் மகா விலாஸ் அகாடி  தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  இடம் கொடுக்காமல் முன்னாள் மந்திரி உத்தவ்  தாக்கரே பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையுடன் மராட்டியத்தில் ஆட்சியமைத்துள்ளனர். முதல் மந்திரியாக ஏக் நாத் பொறுப்பேற்று கொண்டார்.

இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரி உத்தரவு தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டம் நடைபெற்ற தகுதி வழியே  ஏக்நாத்  தலைமையிலான சிவசேனா அணியின் எம்எல்ஏ உதய்  சமந்தின் கார் சென்று இருக்கின்றது. அதன் மீது கற்களை வீசு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தின் பின்புற கண்ணாடிகள் நெருங்கியுள்ளன. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சமந்த் மராட்டியத்தில் இதுபோல அரசியல் நடைபெறுவது கிடையாது. அவர்கள் கைகளில் பேஸ்பால் மட்டைகள் மற்றும் கற்களை வைத்து இருந்தார்கள். எனக்கு முன்னால் முதல் மந்திரியின் பாதுகாப்பு வாகனம் சென்றது. அவர்கள் என்னை தொடர்கிறார்களா அல்லது முதல் மந்திரியை பின் தொடர்கின்றனரா என்பது பற்றி போலீஸ் விசாரணை செய்வார் என கூறினார். இதுபோன்ற சம்பவங்களால் தன்னை அச்சுறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி முதல் மந்திரி ஏக்நாத்திடமும் பேசி இருக்கிறேன் சம்பவம் பற்றி விளக்கியுள்ளேன் என கூறியுள்ளார். மேலும் இது கோழைத்தனமான  செயல் என முதல் மந்திரி ஏக்நாத்  கூறியதுடன் மராட்டியத்தில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்காக இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் சிவசேனா நகர தலைவர் சஞ்சய் மோரே  உட்பட ஐந்து பேரை ஐ பி சி யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும் அவர்களிடம் ஷிண்டே  தலைமையிலான எம்எல்ஏ உதய்  சம்மந்தின்  கார் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு  தாக்குதல் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |