சென்னை பட்டினப்பாக்கத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த விசாரணையின் போது அவர் உயிரிழந்தார். இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசரின் தாக்குதில் அவர் உயிரிழந்து உள்ளார் என்று உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் மூலம் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றச்சாட்டப்பட்ட தலைமை செயலக காலனி போலீஸ்காரர் பவுன்ராஜ், ஏட்டு முனாப், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குமார், ஊர் காவல் படை சேர்ந்த தீபக், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஆறு பேரும் ஜாமீன் கோரி சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் ஆரி பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.