Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீனவர்…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்….!!!!!!!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் மீனவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 23 தினங்களுக்கு மேலாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கின்றது. ஆனால் அங்குள்ள மீனவர்கள் தடையை மீறி ஆற்றுக்கு  சென்று  ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றார்கள்.

மேலும் கர்நாடக மாநிலம் மாறு கொட்டாய் பகுதியில் இருந்து பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு உடை இல்லாமல் ஒகேனக்கல் மெயின் அருவி வரை பரிசலில் அழைத்து வருகின்றார்கள். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கண்காணித்து வருகின்றார்கள். இந்த சூழலில் ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த மீனவர் கோவிந்தராஜ் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது தெரியாமல் நேற்று அதிகாலையில் இருந்து மீன்பிடிக்க சென்று விட்டு மீண்டும் மாலை நடைபாதை வழியாக வெள்ளத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்த கரையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு மீட்பு துறையினர் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீனவரை கயிறு போட்டு பத்திரமாக மீட்டுனர். மீனவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |